பெரும் தொகைக்கு விற்பனையான ஷங்கரின் ‘இந்தியன் 2’ டிஜிட்டல் உரிமை

By செய்திப்பிரிவு

சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ. 220 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் படம், ‘இந்தியன் 2’. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் முக்கியமான காட்சிகள் தைவானின் தைபே, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது படத்தில் கமல்ஹாசனை இளவயது தோற்றத்தில் காட்டும் டிஏஜிங் தொழில்நுட்ப பணிகளுக்காக ஷங்கர் உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது.

இந்த நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் டிஜிட்டல் உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் ரூ. 23 கோடிக்கு கைப்பற்றிய நிலையில், தற்போது டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ. 220 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE