'கங்குவா'வில் சூர்யாவுக்கு வில்லனாகும் பாபி தியோல்?

By செய்திப்பிரிவு

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ‘கங்குவா’. இதில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்படப் பலர் நடிக்கின்றனர். பீரியட் படமான இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

சூர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘கங்குவா’ படத்தின் 2 நிமிட புரோமோ டீஸரை படக்குழு நேற்று அதிகாலை வெளியிட்டது. இதில் புதிய தோற்றத்தில் மிரட்டலாகத் தோன்றுகிறார் சூர்யா. இந்த டீஸரை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வைரல் ஆக்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகப் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். படத்தில் வில்லனுக்கும் முக்கியத்துவம் இருப்பதால் சூர்யாவுக்குச் சமமான நடிகர் வேண்டும் என்று அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாபி தியோல் தரப்பில் கூறும்போது, “பாபி, இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அவர் தோற்றம், உடல்மொழி அனைத்தும் வித்தியாசமானது. ஆகஸ்ட் மாதம் பாங்காக்கில் நடக்கும் ஷெட்யூலில் பாபி தியோல் கலந்துகொள்வார்” என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்