விஜய்யின் ‘லியோ’ படத்துடன் மோதும் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த்கேசரி’

By செய்திப்பிரிவு

நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் வெளியாகும் அதே நாளில் நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த்கேசரி’ படமும் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இதே நாள் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ தெலுங்கு படமும் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் பாலகிருஷ்ணா ரெட்டி நடிக்கும் படம் ‘பகவந்த் கேசரி’. படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்துக்கு காஜல் அகர்வால், ப்ரியங்கா ஜவால்கர், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய்யின் ‘லியோ’, பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ ஒரேநாளில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE