மின்னல் வேகத்தில் மேடையேறிய ரசிகர்... பயத்தில் பின்வாங்கிய விஜய் தேவரகொண்டா!

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘பேபி’ படத்தின் சக்ஸஸ் மீட் வீழாவில் கலந்துகொண்ட விஜய் தேவரகொண்டா, ரசிகர் ஒருவர் மின்னல் வேகத்தில் மேடை ஏறியதால் பயத்தில் பின்னோக்கி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘பேபி’. இதில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நாயகனாக நடித்துள்ளார். வைஷ்ணவி சைதன்யா, நாகேந்திர பாபு உள்ளிட்டோர் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதுவரை இப்படம் ரூ.38 கோடி ரூபாய் வசூலித்தள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் விஜய் தேவரகொண்டா படக்குழுவை பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ரசிகர் ஒருவர் மின்னல் வேகத்தில் மேடையின் மீது ஏறி, தேவரகொண்டாவின் காலில் விழ முயன்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தேவரகொண்டா, பயத்தில் பின்வாங்கி ஓடினார். பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை மேடையிலிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்