விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கொலை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ள படம் ’கொலை’. இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சம்கித் போஹ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியிருக்கும் நிலையில் புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - முதல் காட்சியே அட்டகாசமான ஒளிப்பதிவுடன் ஈர்க்கிறது. ‘எவ்வளவு தான் வாழ்க்கையில ஜெயிச்சாலும் சாவுகிட்ட தோத்துதான் போவோம்’ என வசனம் ஒலிக்க, மாடல் ஒருவரின் பார்வையிலிருந்த ட்ரெய்லர் நகர்கிறது. அவரின் இறப்பை துப்பறிபவராக விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தப்படுகிறார். அவருக்கான இன்ட்ரோ காட்சியின் சிஜியும் மேக்கிங்கும் கவனம் பெறுகிறது.
» இசையமைப்பில் இருந்து விலகியிருப்பது ஏன்? - விஜய் ஆண்டனி விளக்கம்
» ‘மாவீரன்’ பட வாய்ஸ் ஓவருக்கு சம்பளம் வாங்காத விஜய் சேதுபதி
சால்ட் அன் பெப்பர் லுக்கில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். ஒளிப்பதிவும், மேக்கிங்கும், இசை படத்தின் தரத்தை உணர்த்துகிறது. ட்ரெய்லர் படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டியுள்ளது. படம் ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago