ஜெயிலர் தலைப்புக்கு கேரளாவில் சிக்கல்

By செய்திப்பிரிவு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆக.10ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகிறது. இதே பெயரில் மலையாளத்தில் ஒரு படம் உருவாகியுள்ளது. தியான் சீனிவாசன் நடித்துள்ள இந்தப் படத்தை ஷகீர் மடத்தில் இயக்கியுள்ளார். இந்தப் படமும் ரஜினியின் ‘ஜெயிலர்’ வெளியாகும் நேரத்திலேயே ரிலீஸ் ஆக இருக்கிறது.

இரண்டும் வெவ்வேறு கதையை கொண்ட படம் என்றாலும் ஒரே பெயரில் வெளியானால், ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகி, கேரளாவில் மட்டுமாவது பெயரை மாற்ற கோரிக்கை வைத்தனர். ஆனால், மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ‘ஜெயிலர்’ என்ற பெயரிலேயே கேரளாவிலும் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருப்பதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்