சிவகார்த்தியேன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
மடோன் அஸ்வினின் முந்தைய படமான ’மண்டேலா’ வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.30.4 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் 3 நாட்கள் முடிவில் இப்படம் உலக அளவில் ரூ.42 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் படம் ரூ.27 கோடியை வசூலித்துள்ளது.
இந்த ஆண்டைப் பொறுத்தவரை ‘வாரிசு’, ‘துணிவு’, ‘பொன்னியின் செல்வன் 2’ படங்களுக்கு பிறகு 3 நாட்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை ‘மாவீரன்’ பெற்றுள்ளது. விரைவில் படம் ரூ.50 கோடியை எட்டும் என திரை வர்த்தகர்களால் கணிக்கப்பட்டுள்ளது. வாசிக்க > மாவீரன் விமர்சனம்: மாவீரன் Review: அதகளமும் அக்கறையும் நிறைந்த களத்தில் நிகழ்த்தப்பட்டதா பாய்ச்சல்?
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago