கவுதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘His Name Is John’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. முழு பாடல் ஜூலை 19-ம் தேதி ரிலீசாகிறது.
விக்ரமை வைத்து இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் இயக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா நடித்துள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால், படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தெரியாமல் இருந்தது.
இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட பதிவில், “துருவ நட்சத்திரம் படத்துக்கான பின்னணி இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார். அண்மையில், படத்தின் 2-வது சிங்கிள் பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ராப் பாடலான இதனை பால் டப்பா என்பவர் எழுதி பாடியுள்ளார். ‘அவன் போறான் ஃப்ளைட்டுல... இப்போ பறந்துபுட்டான் ஹைட்டுல... உன்ன போட போறான் காட்டுல... அவன் கையில இன்னும் நீ மாட்டல...’ என ஒலிக்கும் பாடல் வரிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ஹாரிஸ் - கவுதம் காம்போவின் பாடலை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ப்ரோமோ வீடியோ:
» “அந்த பாவிமக விட்டுட்டு போனதாலதான் இங்க நிற்கிறேன்” - மேடையில் கண்கலங்கிய சிவகுமார்
» விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ டிசம்பர் 15இல் ரிலீஸ்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago