யோகிபாபு, வாணி போஜன் காம்போ - ராதாமோகனின் புதிய படம் ‘சட்னி சாம்பார்’

By செய்திப்பிரிவு

ராதாமோகன் இயக்கும் புதிய படத்துக்கு ‘சட்னி சாம்பார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகிபாபுவும், வாணி போஜனும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த ஜூன் 16-ம் தேதி வெளியான படம் ‘பொம்மை’. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கும் புதிய படத்துக்கு ‘சட்னி சாம்பார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணி போஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

‘விலங்கு’ வெப் சீரிஸுக்கு இசையமைத்த அஜேஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படத்துக்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்