ரசிகர்களுடன் ‘மாவீரன்’ முதல்காட்சி பார்த்த சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘மாவீரன்’ திரைப்படம் இன்று வெளியாவதையொட்டி அப்படத்தின் முதல் காட்சியை சென்னையில் ரசிகர்களுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் பார்த்தார்.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

மடோன் அஸ்வினின் முந்தைய படமான ’மண்டேலா’ வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்தின் ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இப்படம் இன்று (ஜூலை 14) வெளியாகியுள்ளது. இதனையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் இப்படத்தின் முதல் காட்சியை பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்