வினீத் ஸ்ரீனிவாசன், பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன்... - மீண்டும் இணையும் ‘ஹிருதயம்’ கூட்டணி

By செய்திப்பிரிவு

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘ஹிருதயம்’ பட கூட்டணி மீண்டும் புதிய படத்துக்காக இணைந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ஹிருதயம்’. இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி வசூலை எட்டிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ (Varshangalkku Shesham) என தலைப்பிடப்பட்டுள்ளது.

படத்தில் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். வினீத் ஸ்ரீனிவாசன், அவரது தம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் மோகன்லால் மற்றும் வினீத்தின் தந்தை ஸ்ரீனிவாசன் இடையேயான நட்பை மையமாக வைத்து உருவாகும் என்று கூறப்படுகிறது. மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரணவ்வும், அவரது தந்தை ஸ்ரீனிவாசன் கதாபாத்திரத்தில் தியனும் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்