“விஜய் சேதுபதி, நயன்தாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - ஷாருக்கான் பகிர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: “விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ‘பிரிவ்யூ’ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அவ்வப்போது ட்விட்டரில் #AskSRK என்ற தலைப்பில் ஷாருக்கான் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுண்டு. அந்த வகையில் இன்று ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ரசிகர் ஒருவர், ‘விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஷாருக்கான், “நயன்தாரா மிகவும் இனிமையானவர். அளவுக்கதிமான அன்பும் மரியாதையும் உண்டு. விஜய் சேதுபதி அற்புதமான நடிகர். உண்மையில் இருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என பதிலளித்தார்.

அட்லீ குறித்து கேட்டதற்கு, “அட்லீ மிகவும் கூலான மனிதர். கடின உழைப்பாளியான அவரின் முதல் நோக்கம் என்னைப் படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்பதே. அட்லீ, ப்ரியாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்