இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.
தியேட்டர் ரிலீஸ்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் நாளை (ஜூலை 14) திரையரங்குகளில் வெளியாகிறது. ராஜ்மோகன் இயக்கத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபா ப்ளாக் ஷீப்’ படத்தை நாளை திரையங்குகளில் காணலாம்.
டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் டெட் ரெக்கனிங்’ படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனந்த் தேவரகொண்டாவின் தெலுங்குபடமான ‘பேபி’ மற்றும் குஞ்சாக்கோ போபனின் ‘பத்மினி’ மலையாள படமும் நாளை வெளியிடப்பட உள்ளது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: பசுபதியின் ‘தண்டட்டி’ திரைப்படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. ஸ்ரீகாந்த் ஜி ரெட்டியின் ‘மென் டூ’ (MEN TOO) ஆஹா ஓடிடியில் நாளை காணலாம். அந்தோணி ராமோஸின் ‘ட்ரான்ஸ்ஃபார்மெர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்’ (Transformers: Rise of the Beasts) அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை வெளியிடப்பட உள்ளது.
» சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெள்ளிக்கிழமை வெளியீடு
» ‘ஜவான்’ கேரக்டருக்காக ரஜினி, விஜய் படங்கள் பார்த்தேன் - ஷாருக்கான் பகிர்வு
இணையதள தொடர்: கஜோல் நடித்துள்ள ‘தி ட்ரையல்’ (The Trial) வெப்சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago