மும்பை: 'ஜவான்' படத்தின் தனது கதாபாத்திரத்துக்காக ரஜினிகாந்த், விஜய், அல்லு அர்ஜுன், யஷ் உள்ளிட்டோரின் படங்களைப் பார்த்ததாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ‘பிரிவ்யூ’ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அவ்வப்போது ட்விட்டரில் #AskSRK என்ற தலைப்பில் ஷாருக்கான் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுண்டு. அந்த வகையில் இன்று ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ரசிகர் ஒருவர், ’ஜவான்’ படத்தில் உங்கள் கேரக்டருக்காக நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருந்ததா?” என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஷாருக், “நிறைய அட்லீ படங்கள் பார்த்தேன். உருவாக்கப்பட்டு கொண்டிருக்கும் உலகத்துக்கான உடல் மொழியை புரிந்துகொள்வதற்காக விஜய், அல்லு அர்ஜுன், ரஜினிகாந்த், யஷ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களின் படங்களை பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago