ஹைதராபாத்: நானி நடிக்கும் 30வது படத்துக்கு ‘ஹாய் நான்னா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை.
இந்த நிலையில் நானி நடிக்கும் 30வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ‘ஹாய் நான்னா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ஷவுர்யுவ் இயக்குகிறார். மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago