விஜய் சேதுபதி நடிக்கும் 50-ஆவது படத்துக்கு ‘மகாராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றமும் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர் நடிக்கும் 50-வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்குகிறார். படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago