‘டெட்பூல் 3’-ல் ‘வால்வரின்’ ஹ்யூ ஜாக்மேன்: மார்வெல் அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ’டெட்பூல்’ மூன்றாம் பாகத்தில் வால்வரின் கதாபாத்திரம் இடம்பெறும் என்று மார்வெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மார்வெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ‘வால்வரின்’. எக்ஸ் மென் படங்களில் அறிமுகமான இந்தக் கதாபாத்திரத்தில் ஹ்யூ ஜாக்மேன் நடித்திருந்தார். ‘அயர்ன்மேன்’, ‘கேப்டன் அமெரிக்கா’, ‘தோர்’ கதாபாத்திரங்களைப் போல வால்வரின் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பொருந்திப் போனார் ஹ்யூ ஜாக்மேன். 2017-ல் வெளியான வெளியான ‘லோகன்’ படத்தில்தான் கடைசியாக வால்வரின் கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தது. அப்படத்தின் இறுதியில் அந்தக் கதாபாத்திரம் இறந்துபோவதைப் போல காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, 2019-ஆம் ஆண்டு ‘லோகன்’ படத்தை தயாரித்த 20-த் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கிவிட்டதால், தற்போது இந்தக் கதாபாத்திரத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. ரையான் ரேனால்ட்ஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘டெட்பூல் 3’ படத்தில் ‘வால்வரின்’ கதாபாத்திரம் இடம்பெறுவதை மார்வெல் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை மார்வெல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், இறந்துபோன லோகன் (வால்வரின்) மீண்டும் உயிரோடு வந்தது எப்படி என்பது குறித்து ஹ்யூ ஜாக்மேனுடன் சேர்ந்து விளக்கும் ஒரு வீடியோவையும் ரையான் ரேனால்ட்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரையான் ரேனால்ட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்