சிக்னலில் விதிமீறல்: ரூ.500 அபராதம் செலுத்திய விஜய்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் சிக்னலில் நிற்காமல் சென்றதாக நேற்று வீடியோ வைரலான நிலையில் இன்று சாலை விதிமீறலில் ஈடுபட்டதற்கான ரூ.500 அபராதத்தை போக்குவரத்து காவல்துறையிடம் விஜய் செலுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் தனது பனையூர் அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நேற்று (ஜூலை 11) ஆலோசனையில் ஈடுட்டார். அவருக்கு மக்கள் இயக்கத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர் திண்டுக்கல் தேனி, சேலம், கிருஷ்ணகிரி ஒசூர், விருதுநகர், சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அணி தலைவர்கள் என 300 பேர் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து நடிகர் விஜய் காரில் புறப்பட்டார். வழி நெடுகிலும் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், செல்லும் வழியில் சிவப்பு நிற சிக்னலில் நிற்காமல் விஜய்யின் கார் செல்லும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது. பலரும் விஜய்யின் இந்த செயலை கண்டித்தனர். இதனைத் தொடர்ந்து சிக்னலில் நிற்காமல் விதிமீறலில் ஈடுபட்டதற்காக விஜய்யின் சார்பில் ரூ.500 அபராதம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான ரசீதை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்