“தமிழகத்தின் கட்டிடக் கலை மெய்சிலிர்க்க வைக்கிறது” - ராஜமவுலி அனுபவ பகிர்வு

By செய்திப்பிரிவு

“நேர்த்தியான கட்டிடக் கலை, அற்புதமான பொறியியல் வடிவமைப்புடன் பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது” என இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் மத்திய பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. என் மகளின் ஆசைப்படி கோயில்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்தோம். ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம். கொடுக்கப்பட்ட சில நாட்களில் பனிப்பாறையின் நுனியை மட்டுமே தொட முடியும்.

நேர்த்தியான கட்டிடக் கலை, அற்புதமான பொறியியல் வடிவமைப்புடன் பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது.

கும்பகோணம், ராமேஸ்வரத்தில் உள்ள முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் உணவு அருமையாக இருந்தது. இதனாலேயே ஒரு வாரத்தில் 2-3 கிலோ எடை கூடியிருப்பேன் என நினைக்கிறேன். 3 மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு, இந்த தாயகம் சுற்றுப் பயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது” என பதிவிட்டுள்ளார். மேலும்தான் சென்ற இடங்களுக்கான வீடியோவையும் ட்வீட்டில் இணைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE