இமாச்சல பிரதேசத்துக்கு வரவேண்டாம்: நடிகை கங்கனா வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சிம்லா: வட மாநிலங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது.

கங்கை உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்துக்கு இப்போது செல்ல வேண்டாம் என்று நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை வைத்துள்ளார்.

கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘‘இமாச்சலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் நிலச்சரிவுகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்துக்குச் செல்வதைத் தவிர்க்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்