காதல் கல்யாண கலாட்டா - ஹரீஷ் கல்யாணின் ‘எல்ஜிஎம்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

தோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் தோனி. அப்படி அவர் திரைத் துறையிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்துள்ளது.

அறிமுக இயக்குநர் ரமேஷ் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - படத்தின் கதையை வெளிப்படுத்தும் வகையில் எந்த சஸ்பென்ஸும் இல்லாமல் ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது. காதல் அதைத் தொடர்ந்து நடக்க இருக்கும் திருமணம். இந்தத் திருமண பந்தத்தில் மாமியரை புரிந்துகொள்ள மருமகள் ஏற்பாடு செய்யும் பயணம், அதில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களாக ட்ரெய்லர், படத்தின் கதையை கண்முன் நிறுத்துகிறது.

ஜாலியான காதல், கல்யாண கலாட்டாவாக படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கபடவில்லை. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்