ரத்தம், கோபம், வலி... - வசந்தபாலனின் ‘அநீதி’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘ஜெயில்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘அநீதி’. இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் தலைப்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி? - எந்த வித சமரசமுமில்லாமல் மொத்த டீசரும் ரத்தம், வலி, சண்டை, கோபம் என உணர்ச்சிகளாலேயே கடக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் சீரியஸாகவே கட் செய்யப்பட்டுள்ளது. படம் முழுவதும் இதே சீரியஸ் டோனில் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது.

ரத்தமும் சதையுமான ட்ரெய்லரில் மருந்து கூட காமெடியோ, காதலோ வேறு எந்த காட்சிகளோ வசனமோ இடம்பெறாமல் அழுத்தமாகவே காட்சிகள் கடக்கின்றன. இறுதியில் மட்டும் ‘மனதில் அணையாது எரியும் ஒரு பெயர் நீ’ என்ற அர்ஜுன் தாஸ் பேசும் வசனத்துடன் ட்ரெய்லர் முடிகிறது. படம் வரும் ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்