“கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்துள்ளன” - சமந்தா பகிர்வு

By செய்திப்பிரிவு

“மிக நீண்ட மற்றும் கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்துள்ளன” என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சமந்தா கடந்த ஒரு வருட காலமாக மையோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டு படங்களுக்குப் பிறகு சினிமாவிலிருந்து சின்ன ப்ரேக் ஒன்றை எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின. அவர் நடிப்பில் வெளியான ‘யசோதா’, ‘சாகுந்தலம்’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர், விஜய்தேவர கொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல ‘சிட்டாடடல்’ வெப் சீரிஸிலும் நடித்துமுடித்துள்ளார். இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செல்ஃபி ஒன்றை பதிவிட்டு அதில், “மிக நீண்ட மற்றும் கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்துள்ளன. இதனை நான் சாத்தியப்படுத்தி உள்ளேன் என்பது நிறைவாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்