சென்னை: தெலுங்கை தொடர்ந்து விரைவில் பாலிவுட்டிலும் சிவகார்த்திகேயன் அறிமுகமாக இருப்பதாக ‘மாவீரன்’ படத்தின் புரொமோஷன் நிகழ்வில் நடிகர் அதிவி சேஷ் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஹைதரபாத்தில் சமீபத்தில் இப்படத்துக்கான புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கு நடிகர் அதிவி சேஷ், இயக்குநர் அனுதீப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் அதிவி சேஷ், “சிவகார்த்திகேயன் பெரிய நடிகர் மட்டுமல்ல. பெரிய மனம் கொண்ட பெரிய நடிகர் என்பதை தெரிந்து கொண்டேன். தெலுங்கைத் தொடர்ந்து விரைவில் அவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். மன்னிக்கவும் செய்தியை நான் பிரேக் செய்துவிட்டேன்” என்று கூறினார்.
இது தொடர்பான வீடியோவை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago