ஏன் இந்த இடைவெளி?- மீரா ஜாஸ்மின் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தயாரிப்பாளர் ‘ஒய் நாட்’ சஷிகாந்த் ‘டெஸ்ட்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கின்றனர். மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் இணைந்துள்ளார். 2014-ம் ஆண்டு வெளியான ‘விஞ்ஞானி’ படத்தில் கடைசியாக அவர் நடித்திருந்தார். பின் மலையாளத்தில் நடித்தாலும் 9 வருடமாக தமிழ் சினிமாவுக்கு வரவில்லை. ‘டெஸ்ட்’ மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் அவர் கூறியதாவது:

மாதவனுடன் ‘ரன்’, ‘ஆய்த எழுத்து’ படங்களில் நடித்திருக்கிறேன். சித்தார்த்தும் ‘ஆய்த எழுத்து’ படத்தில் நடித்திருந்தார். அவர்களுடன் ‘டெஸ்ட்’ படத்தில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. நயன்தாராவுடனும் இந்தப் படத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிப்பது, எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இடையில் சில காலம் என் தனிப்பட்ட காரணங்களுக்காக நடிக்கவில்லை. இப்போது மீண்டும் நடிப்பைத் தொடங்கி இருக்கிறேன். இவ்வாறு மீரா ஜாஸ்மின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்