ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை தொடக்கம்: பிறந்தநாளில் கணவருக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்

By செய்திப்பிரிவு

நடிகர் ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டி தனது கணவரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதாவது ‘ரிஷப் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை அவர் தொடங்கியுள்ளார்.

இது தொடர்பான நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி, “மற்றவர்களுக்கு உதவுவதற்காக எதாவது பங்களிப்பை செலுத்துங்கள் என பலரும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதன் விளைவாக அதிகாரபூர்வமாக ஒரு அறக்கட்டடளையை நிறுவ வேண்டும் என நினைத்து, உதவி தேவைப்படும் தனி நபர்கள், குழந்தைகளுக்கு இதன் மூலம் உதவலாம் என முடிவு செய்தோம். போலவே, மொத்த சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு பங்களிப்பு செலுத்த இந்த ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது.

வேறு எந்த பொருளை கிஃப்டாக கொடுத்திருந்தாலும் ரிஷப் ஷெட்டி இந்த அளவுக்கு மகிழ்ந்திருக்க மாட்டார். இந்த அறக்கட்டளையானது கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இதன் மூலம் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர முடியும்” என்றார்.

ரிஷப் ஷெட்டி பேசுகையில், “சினிமா துறையில் நுழைந்து சாதிக்க வேண்டும் என நினைத்து கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த இளைஞனுக்கு உங்கள் மனதில் இடமளித்ததுக்கு நன்றி. ‘காந்தாரா’ படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பால் அது உலக அளவில் வெற்றி பெற்றது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்