ரவீந்திரநாத் தாகூர் ஆக நடிக்கும் அனுபம் கேர்!

By செய்திப்பிரிவு

மும்பை: பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தனது 538-வது படத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், மகாகவியுமான ரவீந்திரநாத் தாகூர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியில் முக்கிய நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் அனுபம் கேர். இதுவரை 537 படங்களில் நடித்துள்ள அவர், தனது அடுத்த படத்தில் சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய கீதத்தை இயற்றியவருமான ரவீந்திரநாத் தாகூர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான புகைப்படத்தையும் அனுபம் கேர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனது 538-வது படத்தில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூராக நடிப்பதில் மகிழ்ச்சி. உரிய நேரத்தில் விவரங்களை வெளியிடுவேன். அவரை திரையில் கொண்டுவரும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் உங்களுடன் பகிர்வேன்” என்று அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.

இப்படம் தவிர்த்து கங்கனா இயக்கிவரும் ‘எமர்ஜென்சி’, அனுராஜ் பாசு இயக்கத்தில் உருவாகும் ‘மெட்ரோ இன் டினோ’ மற்றும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இயக்கும் ‘தி வேக்சின் வார்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்