பெங்களூரு: ‘விஜய் 68’ படத்துக்குப் பிறகு கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘லியோ’ வெளியானதும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்துக்குப் பிறகு கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து ஒரு படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிச்சா சுதீப்பை வெங்கட் பிரபு நேரில் சந்திந்திருந்தார். அப்போது அவர் கூறிய கதை சுதீப்புக்கு பிடித்திருந்ததாகவும், வெங்கட் பிரபு - சுதீப் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது வி கிரியேஷன்ஸ் தாணு தயாரிப்பில் தனது 46வது படத்தில் கிச்சா சுதீப் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்குகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago