சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் 7 நாட்களில் ரூ.36 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வெளியான முதல் நாள் ரூ.6 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, இயக்குநர் மாரி செல்வராஜுக்கு விலை உயர்ந்த மினி கூப்பர் காரை உதயநிதி பரிசாக வழங்கியிருந்தார். இந்த சூழலில், வெளியான ஏழு நாட்களில் மாமன்னன் திரைப்படம் ரூ.36 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வார இறுதிகளில் இப்படம் ரூ.40 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இப்படம் ரூ.2.25 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago