‘கேஜிஎஃப்’ பாணி பில்டப் காட்சிகள்.. பிரபாஸின் ‘சலார்’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ‘கேஜிஎஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமானப் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், செப். 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.

டீசர் எப்படி: இப்படம் ’கேஜிஎஃப்’ யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இருக்கலாம் என்று ஆரம்பம் முதலே சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. அதனை உறுதி செய்யும் வகையில் ‘கேஜிஎஃப்’ படத்தைப் போலவே அதே இருண்ட பின்னணி, புழுதி பறக்கும் ஆக்‌ஷன், துணை கதாபாத்திரங்களின் பில்டப் வசனங்கள் என செல்கிறது டீசர். ‘கேஜிஎஃப்’ படத்தில் ஆனந்த் நாக் போல இதில் நடிகர் டின்னு ஆனந்த் கொடுக்கும் பில்டப்போடு டீசர் தொடங்குகிறது. ‘லயன், சீட்டா, டைகர், எலிஃபண்ட் வெரி டேஞ்சர்ஸ், பட் நாட் இன் ஜூராசிக் பார்க்’ என்ற பில்டப் வசனங்களின் பின்னணியில் அறிமுகமாகிறார் பிரபாஸ். ரவி பஸ்ரூரின் இசையும் புவன் கவுடாவின் ‘ரக்கட்’ ஒளிப்பதிவும் இது எப்படியான படமாக இருக்கப் போகிறது என்பதை கூறுகின்றன.

‘சலார்’ டீசர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE