“மாமன்னன் படத்தை மானுடம் போற்றும் படைப்பாக்கியவர் வடிவேலு” - உதயநிதி பாராட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: “மாமன்னன் படத்தை மானுடம் போற்றும் படைப்பாக்கியவர்” என நடிகர் வடிவேலுவுக்கு உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, “தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலுவை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்” என பதிவிட்டுள்ளார். மேலும், அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் உதயநிதி ஸ்டாலினும், மாரி செல்வராஜும் இணைந்து வடிவேலுவுக்கு மாலை அணிவிக்கின்றனர். தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் செண்பக மூர்த்தி, வடிவேலுவிடம் பூங்கோத்து கொடுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்