ஜெயம் ரவியின் ‘ஜீனி’ பூஜையுடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி, அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட்டில் திரைக்கு வருகிறது. இப்படம் தவிர ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் புதுமுக இயக்குநர் அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘ஜீனி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி, தேவயாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்