ஆரோக்கியமான தோற்றத்தில் ஷாருக்கான் - ரசிகர்கள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: அமெரிக்காவில் படப்பிடிப்பின்போது ஷாருக்கானின் மூக்கில் அடிபட்டதாக நேற்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று மும்பை திரும்பிய ஷாருக்கான் ஆரோக்கியமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஷாருக்கான் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஷாருக்கான் விரைவில் குணமடைய சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஷாருக்கான் மும்பை விமான நிலையம் வந்திறங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அவரது மூக்கில் காயங்கள் வெளிப்படையாக தெரியவில்லை. இதனையடுத்து இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஷாருக்கான் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் தற்போது ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. வரும் செப்டம்பர் 7-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்