சென்னை: ‘நேரம்’, ‘பிரேமம்’, ‘கோல்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்துக்கு ‘கிஃப்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.
'பிரேமம்' வெற்றியைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘கோல்ட்’ என்ற படம் வெளியானது. பிரித்விராஜ், நயன்தாரா நடித்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘கிஃப்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
37 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago