ஹைதராபாத்: தனுஷின் ‘மாரி 2’ படத்தில் ‘ரவுடி பேபி’, ‘பட்டாஸ்’ படத்தில் ‘ஜில் பிரோ’, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ‘மேகம் கருக்காதா’ உட்பட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர். தெலுங்கில் ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தில் இவர் நடனம் அமைத்த ‘புட்ட பொம்மா’ பாடல் சூப்பர் ஹிட்டானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களுக்கு நடனம் அமைத்து வரும் இவர், ‘யதா ராஜா ததா பிரஜா’ படத்தின் மூலம் ஹீரோவாக இருப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. அந்தப் படம் என்னவானது என்று தெரியவில்லை.
இந்நிலையில், அவர் ஹீரோவாக நடிக்கும் ‘ரன்னர்’ படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விஜய் சவுத்ரி இயக்கும் இந்தப் படம் போலீஸ் கதையை கொண்டது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகிறது. மணி சர்மா இசை அமைக்கும் இந்தப் படத்தை விஜய தமருகா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago