‘குஷி’ கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் சமந்தா

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடிகை சமந்தா, சில மாதங்களுக்கு முன் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் நடித்து வந்த ‘குஷி’ உட்பட சில படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவர் குணமடைந்த பின், ‘குஷி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதில் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து மீண்டும் நடித்த சமந்தா, பின்னர் ‘சிட்டாடெல்’ வெப் தொடர் படப்பிடிப்புக்காக செர்பியா சென்றார். அங்கு வருண் தவணுடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பின்னர் இந்தியா திரும்பிய அவர், இப்போது ‘குஷி’ கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ராஜமுந்திரியில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.

படத்தில் காதலர்களாக நடிக்கும் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். இந்த காட்சியுடன் ஷூட்டிங் நிறைவடைவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைக்கும் இந்தப் படம் செப்.1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE