மும்பை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்பிடிப்பின்போது ஷாருக்கானுக்கு மூக்கில் அடிபட்டதாகவும், இதனால் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இப்படம் தவிர மற்றொரு படத்தின் படப்பிடிப்பிலும் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்துக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்த்துக்கு ஷாருக் கான் சமீபத்தில் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா திரும்பியுள்ள ஷாருக் கான் தற்போது நலமுடன் இருப்பதாகவும், காயம் சரியானதும் விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஷாருக்கான் விரைவில் குணமடைய சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago