சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தங்களுக்கும் எந்த மோதலும் இல்லை என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர்கள் நலனை, உரிமைகளைப் பாதுகாப்பது போலவே, தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் செய்திகள் பரப்பப்படுகின்றன.
தமிழ்த்திரைத்துறையின் முக்கிய சங்கங்களான நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்சினைகளைக் கூறியுள்ளனர். இவை வழக்கமாக எழக் கூடிய, பேசினால் தீர்ந்து விடும் பிரச்சினைகள்தான். ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்சினைகளும் விரைவில் களையப்படும். சங்கங்கள் இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago