ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் படமான ‘அனிமல்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த படம் டிசம்பர் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் படம் ‘அனிமல்’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓப்ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். டி- சிரீஸ், சினி ஒன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அமீத் ராய் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் டிசம்பர் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா, “ஆகஸ்ட் 11-ம் தேதியில் படம் வெளியிட முடியாததுக்கு காரணம் குவாலிட்டி. இது வழக்கமான பதிலாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. குவாலிட்டிக்காகத்தான் தள்ளி வைத்தோம். உதாரணமாக, படத்தில் 7 பாடல்கள் உண்டு. 7 பாடல்களும் 5 மொழிகளில் மாற்ற வேண்டும்.
இந்த 35 பாடல்களையும் 35 பாடலாசிரியர்களை வைத்து வெவ்வேறு பாடகர்களை வைத்து பாட வைக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் திட்டமிட்ட நாளிலிருந்து படம் அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நான் இதனை தாமதமாகத்தான் உணர்ந்தேன். இல்லாவிட்டால் டீசரை வெளியிட்டிருக்க மாட்டேன். டீசருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago