‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா...’ - வடிவேலு குரலில் ஈர்க்கும் ‘மாமன்னன்’ மேக்கிங் வீடியோ

By செய்திப்பிரிவு

மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ படம் வியாழக்கிழமை (ஜூன்29) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் நாளை (ஜூன்29) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோ எப்படி? - ப்ளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் இந்த வீடியோவின் பின்னணியில் மெலிசான வடிவேலுவின் குரல் மட்டும் பாடலாக ஒலிக்கிறது. ‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா...’ என்ற எவர்கிரீன் ஹிட் பாடலை எந்த இசைக் கலப்பும் இல்லாமல் அவர் பாடும்போது படப்பிடிப்பு தளக் காட்சிகள் வந்து செல்கின்றன. ஒருவித மென்சோகம் கலந்த வடிவேலுவின் குரலில் முன்நகரும் காட்சிகள் ஈர்க்கின்றன. இந்த வீடியோ படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்