ஜூன் 30-ல் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூன் 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் ஆனந்த் எல் ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE