பாலிவுட் நடிகை சாரா அலிகான் நடித்துள்ள ‘ஜரா ஹட்கே ஜரா பச்கே’ (Zara Hatke Zara Bachke) இந்தி திரைப்படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ‘மிமி’ (Mimi) படத்தை இயக்கியவர் இயக்குநர் லக்ஷ்மன் உடேகர். வாடகை தாய் விவகாரம் குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது லக்ஷ்மன் உடேகர் சரா அலிகான், விக்கி கௌஷலை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘ஜரா ஹட்கே ஜரா பச்கே’ (Zara Hatke Zara Bachke).
மடாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தீப் ஷிரோத்கர் இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 25 நாட்கள் கழித்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரவேற்பின் எதிரொலியாக படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. கிட்டத்தட்ட 2 மடங்கு வசூலை குவித்து படம் சாதித்துள்ளது.
முன்னதாக பாலிவுட்டிலிருந்து வெளியான பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 11 நாட்களில் ரூ.450 கோடி வரை வசூலித்துள்ளது. இன்னும் பட்ஜெட்டை கூட படத்தால் நெருங்கமுடியாத சூழலில் நிறைய இடங்களில் ‘ஆதிபுருஷ்’ படம் திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
32 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago