ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ரூ.5.4 கோடி மதிப்புள்ள ‘ரேஞ்ச் ரோவர்’ சொகுசு காரை வாங்கியுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
‘சர்காருவாரி பாட்டா’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு நடித்து வரும் படம் ‘குண்டூர் காரம்’. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இந்த ஆக்ஷன் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் அருகே ஜன்வாடாவில் நடந்து வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இந்நிலையில், மகேஷ் பாபு ‘ரேஞ்ச் ரோவர் எஸ்வி’ ( Range Rover SV) சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
ரூ.5.4 கோடி மதிப்புள்ள இந்தக் காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர்கள் மோகன்லால், சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ‘ரேஞ்ச் ரோவர்’ காரை வைத்திருந்த போதிலும், மகேஷ் பாபு வாங்கியுள்ள கோல்டன் கலர் மாடல் அரிய வகையானது என கூறப்படுகிறது. மேலும், ஹைதராபாத்தில் உள்ள ஒரே கோல்டன் ரேஞ்ச் ரோவர் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
32 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago