‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ பட டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
‘வால்டர் வீரய்யா’ படத்தைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் அடுத்தாக வெளியாக உள்ள படம் ‘போலா சங்கர்’ (Bholaa Shankar ). படத்தை மெஹர் ரமேஷ் இயக்கியுள்ளார். படத்துக்கு மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் இசையமைத்துள்ளார். சிரஞ்சீவி தவிர்த்து தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த், ரகுபாபு, முரளி சர்மா, ரவிசங்கர், வெண்ணிலா கிஷோர், துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் லட்சுமி மேனனின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ஸ்ருதி ஹாசன் கேரக்டரில் தமன்னாவும் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி? - மொத்த டீசரில் சிரஞ்சீவியின் எனர்ஜியும் இளமையான தோற்றமும் கவனம் பெறுகிறது. 1.13 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் 1 நிமிடம் ஆக்ஷன்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என கூறும் அளவுக்கு ஃப்ரேமுக்கு ப்ரேம் அடி தடி. சிரஞ்சீவி ‘மாஸ்’ஆக ஸ்லோமோஷனில் நடந்து வரும் காட்சியுடன் பின்னணி இசையும் ஈர்ப்பு.
» “சாதிப் பெயர் கொண்ட பாடல்களை ஒலிபரப்ப தடை விதிப்பீர்” - முதல்வருக்கு சீனு ராமசாமி வேண்டுகோள்
» ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ்!
தெலுங்கு சினிமாவுக்கென இருக்கும் பிரத்யேக மசாலாவை ‘விவேகம்’ படத்தின் மீது தூவி கலர்ஃபுல்லாக படத்தை உருவாக்கியிருப்பதை உணர முடிகிறது. ஒரு ஃப்ரேமில் மட்டும் கீர்த்தி சுரேஷ், தமன்னா வந்து செல்கின்றனர். ஆகஸ்ட் 11-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago