லியோ படத்தின் அனிமேஷன் டீசரை விஜய் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
இன்று விஜயின் 49-வது பிறந்த நாள் தினம். இதனையொட்டி பல்வேறு மாஷ் அப் - களை பட தயாரிப்பு நிறுவனங்களும், செய்திச் சேனல்களும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் MADDY MADHAV என்ற விஜய் ரசிகர், லியோ படத்தின் அனிமேஷன் டீசரை வேறு கதைக் களத்தில் வெளியிட்டிருந்தார். அதில் விஜயின் உருவத்தை மிக நேர்த்தியாகவும், ஸ்டைலிஷாகவும் அனிமேஷனில் அவர் வடிவமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த ரசிகரின் டீசர் இணையத்தில் வைரலானது.
இதுவரை அந்த வீடியோவை 70 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர்.. மேலும் ஸ்டியோ க்ரீன் போன்ற தயாரிப்பு நிறுவனங்களும் அந்த வீடியோவை குறிப்பிட்டு அவரைப் பாராட்டி இருந்தனர். மேலும் இணையத்தில் விஜய் ரசிகர்களின் பாராட்டு மழையில் அந்த அனிமேஷன் டீசர் வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.LEO 3D Animated Video.
Dear @actorvijay anna, this is for you
#HBDThalapathyVIJAY #Leo @actorvijay@Jagadishbliss @7screenstudio@RamVJ2412 @GuRuThalaiva @OTFC_Off @VijayFansTrends pic.twitter.com/SzY1fUmdIg
முன்னதாக, லியோ படத்தின் ‘நான் ரெடி’ முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6.30-க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago