சென்னை: ஆர்யா - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ஆர்யா கதாநாயகனாவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்துக்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஜூன் 21) நடைபெற்றது.
இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விபரம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
» விரைவில் ‘புதிய பாதை’ இரண்டாம் பாகம் - பார்த்திபன் உறுதி!
» “மனப்பிறழ்வை ஏற்படுத்திய படம்” - விவாதப் பொருள் ஆன ‘தேவர் மகன்’ குறித்த மாரி செல்வராஜின் பேச்சு
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago