கன்னியாகுமரி: நடிகர் விஜய் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் வர விரும்பினால் அவரை ஏற்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு புதிதல்ல. அதுபோல பல தலைவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து சாதித்திருக்கிறார்கள். விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து காலம் பதில் சொல்லும். இப்போதுதான் தன்னுடைய அரசியல் வருகை குறித்து நடிகர் விஜய் வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். போகப் போக பார்க்கலாம்" என் கூறினார்.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் கடந்த ஜூன் 17 ம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். விஜய்யின் இந்த முன்னெடுப்பு, அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago