கரண் ஜோஹரின் ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ டீசர் வெளியானது

By செய்திப்பிரிவு

மும்பை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்கும் ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கரண் ஜோஹர். 1998ஆம் ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘குச் குச் ஹோத்தா ஹை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ‘கபி குஷி கபி கம்’, ‘கபி அல்விதா நா கெஹ்னா’, ‘மை நேம் இஸ் கான்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கடைசியாக 2016ல் வெளியான ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தை இயக்கிய அவர், அதன் பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. மாறாக தயாரிப்புப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்கியுள்ள படம் ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’. இதில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காதல், சென்டிமெண்ட், உறவுச் சிக்கல்கள் என முழுக்க முழுக்க தனது பழைய ஸ்டைலில் கரண் ஜோஹர் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டு கரண் ஜோஹருக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வருகிறது.

‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ டீசர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE