நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த மேலாளர்?

By செய்திப்பிரிவு

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட நாட்களாக மேலாளராக இருந்தவர், அவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படங்களில் அறிமுகமானவர், ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேலாளர், அவரிடம் ரூ.80 லட்சம் ஏமாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகாவுடன் ஆரம்ப காலக்கட்டதிலிருந்து நீண்ட நாட்களாக மேலாளராக இருந்தவர் இப்படியான செயலில் ஈடுபட்டதை அறிந்ததும், அவரை பணியிலிருந்து உடனடியாக நீக்கி நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதை வெளியே தெரியப்படுத்த வேண்டாம் என எண்ணி கடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்ததாக 'அனிமல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரன்பீர் கபூர் நடிக்கும் இந்தப் படத்தில் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்