சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய்யின் புதிய லுக்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வில் நடிகர் விஜய்யின் புதிய லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு சென்னை - நீலாங்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய்யின் புதிய லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் விஜய் நடித்து வருகிறார் இதில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன.

இப்படத்துக்காக கடந்த சில மாதங்களாக சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியுடன் இருந்த விஜய், தற்போது முற்றிலும் புதிய லுக்கில் இந்த கல்வி விருது நிகழ்வில் தோன்றியது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இது வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கான புதிய கெட்-அப் ஆக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்